தந்தையான தமயன்
தந்தையான தமயன்


வெகுநாளாய் நிரப்பமுடியாமல்
கிடப்பில் கிடக்கும்
தந்தையெனும்
காலிப்பணியிடம்
சிற்சமயம் நிரப்பப்படுகிறது
தமயனெனும் அவசரச்சட்டத்தால்..
குழந்தையாய் தோழனாய்
கண்டவன் இன்று
குடும்பத்தலைவனான்..
ஒருமுறை வாழ்த்துக்கூறா
எம்பிறந்தநாளிலும்
ஆசிர்வாதம் செய்கிறான்..
தந்தை கரம்பிடித்துச்செல்ல
நினைத்த இடமெல்லாம்
எம்மை நெஞ்சில் சுமந்துசெல்கிறான்..
காற்றுமென்னை தீண்டுமென
காற்றாடி விடுத்து..
கையால் காற்றை புடைத்து
கொடுக்கிறான்..
அப்பாவை இழந்து
எம்மோடு கதரியவன்
இன்று எமக்கு
அப்பாவாகிப்போக..
நானும் மாறிப்போனேன்
அவன் முதற்பிள்ளையாக..