பெண்மையெனும் உண்மை
பெண்மையெனும் உண்மை
உடன்பிறந்த உன்னத உறவுகளான
சகோதரிகளின் கள்ளங்கபடமில்லா
அன்பிலும் அரவணைப்பிலும்
வளர்ந்திருக்கிறேன்.
உடன்பயின்று இன்றுமென் நினைவுகளில்
நடம்புரியும் இளம்வயது தோழிகளின்
இணையற்ற இனிமையான நட்பிலே
திழைத்திருக்கிறேன்.
தன்னையே முழுதாக பரிசளித்து என்
உணர்ச்சிகளிலும் உணர்வுகளிலும்
உள்ளூற கலந்த மனைவியின் காதலால்
உயர்ந்திருக்கிறேன்.
உயிரினும் உயர்வாக இதயத்தில்
வீற்றிருக்கும் அன்பின் தேவதைகளான
மகள்களின் ஒப்பில்லா அன்பிலே
கரைந்திருக்கிறேன்..
தடுமாறிய தருணங்களில் இடைநின்று
தடம் மாற்றிய தனித்துவமான
தோழிகளின் கனிவான கண்டிப்பில்
நெகிழ்ந்திருக்கிறேன்.
பொறுப்போடு பணியாற்றியென்
பணிச்சுமையில் பங்கெடு(த்த)க்கும்
பெண்களின் கனிவான பணியினை கண்டு
வியந்திருக்கிறேன்..
வாழ்கைச்சாலையின் சந்திப்புகளில்
சந்தித்த மங்கையரின் அன்பான,புன்னனகை
கலந்த பொறுமையான செயல்திறன் கண்டு
ரசித்திருக்கிறேன்..
அனைத்திற்கும் மேலாக அம்மா...
எனக்கு உடலும் உயிரும் தந்து
தனக்கென ஒருபோதும் வாழாது
தினந்தினம் சிறுகணமும் ஓயாது
கனவிலுங்கூட எங்களுக்காக வாழ்ந்து
எனது கண்முன்னே தியாகியாக வாழ்ந்து
மனதில் கடவுளாக நிறைந்து உயர்ந்த
உனது கடனை அடைத்திட முனைந்து முயன்று
வினவினாலும் விடையேதும் கிடைக்காதென்று
உணர்ந்திருக்கிறேன்..
பெண்களில்லாமல் ஆண்களில்லை
பெண்மையில்லாமல் வாழ்க்கையில்லை
தாய்மை இல்லாமல் யாருமேமில்லை
மெய்யோடு மேவிய உயிருமில்லை..
இனிய உலக மகளிர் நாள் வாழ்த்துகள்..
