ஆணா?? பெண்ணா??
ஆணா?? பெண்ணா??
ஆண்களென்றால்
உயர்வுமில்லை..
பெண்களென்றால்
தாழ்வுமில்லை..
பெண்மை கலந்தால்
ஆண்மையும் அழகு
ஆண்மை கலந்தால்
பெண்மையும் அழகு..
ஆண்களும் பெண்களும்
இணைந்தே இருப்பினும்
இறைவனின் படைப்பினில்
இருவருமெதிலும் ஒன்றல்ல..
இருவரில் ஒருவருக்கு மற்றவர்
எதிலும் குறைந்ததவருமில்லை...
இருவரில் யாருக்கு யாரும்
எங்கும் உயர்ந்தவருமில்லை
உடலாலும் தோற்றத்தாலும்
முழுவதுமாக வேறுபட்டிருக்கும்....
ஆணையும் பெண்ணையும்
ஒப்பிட்டு பேச அவசியமுமில்லை..
ஆணோ.. பெண்ணோ.. ஒருவரை
மற்றவர் புரிந்து மதித்து நடந்தால்
அடுத்தவர் மனதில் ஆழப்பதிந்து
உறவுகள் என்றும் உன்னதமாகும்..
இரா.பெரியசாமி
