என் அருமை பாரதமே
என் அருமை பாரதமே
என் அருமை பாரதமே
என் செல்ல பாரதமே
என் நல்ல பாரதமே
என்ன செய்கிறாய் _நீ
என்ன செய்கிறாய்?
பாட்டி சுட்ட பனியாரம்
அத்தை சுட்ட ஆப்பம் விட்டு
பட்டணத்து பீட்சாவையும்
பகட்டான பர்க்கரையும்
சாஸ் வச்சு தொட்டு க்கிட்டு
சப்பு கொட்டி சாப்பிட்டுவிட்டு
என்ன செய்கிறாய் _ நீ
என்ன செய்கிறாய்?
வற்றாத ஜீவநதி
வற்றிவிட்ட சோகம் என்ன
பாடி நின்ற பசுமரங்கள்
வாடி நின்ற சோகம் என்ன
நெகிழியும் சாக்கடையும்
புகையும் நம் பகையாம்
என்ன செய்கிறாய்_நீ
என்ன செய்கிறாய்?
என் நல்ல நல்ல பாரதமே
என் செல்லச்செல்ல பாரதமே
என் அருமை அருமை பாரதமே
என்ன செய்கிறாய் _நீ
என்ன செய்கிறாய்.