பெண்
பெண்


பெண் என்றால் பேயும் இறங்கும்..
ஆம் அவள் அழகிய ஆத்மார்த்த சக்தி...
தடம் மாறி வந்தவர்களும் இவ்வுலகில் தடம் பதிக்க தன் உழைப்பைத் தருகிறவள்.!
தன் முழுமையும் போனாலும்
தாம் சார்ந்த ஆடவனின் தேவைகளை நிறைவேற்றுபவள்.!
ஆயிரம் கனவுகள் அவளுக்கிருக்க
அவற்றையெல்லாம் ஓரம் வைத்து
உற்றவனுக்காய் ஓடாய் உழைப்பவள்.!
அவளின் தேவை மறந்து, தூக்கம் மறந்து...
கடமையாற்றும் அவளுக்கு இறுதியில் கிடைப்பது
"இதை இன்னும் இப்படி செய்திருக்கலாம்"
என்ற விமர்சனம் மட்டுமே.!
அவற்றை கடுகளவு பொருட்படுத்தாது
காலச்சக்கரத்தில்
அனைத்துமாய் சுழலும்
அனைத்து ஆத்மார்த்த சக்திகள்!!