ஆண் பெண் உடை- பேருண்மை
ஆண் பெண் உடை- பேருண்மை
ஆண் ஆடையின்றி அலைந்தாலும்
நடு இரவில் தனித்திருந்தாலும்
ஒன் பீஸ்-ல் குளித்தாலும்
சரக்கடித்து ஆடை விலகி அறைகுறையாய் கிடந்தாலும்
எந்த பெண்ணும் சலனப்பட்டு
தவறாய் நடப்பதில்லை
என்பது பேருண்மை...
பெண் தனியே சென்றாலும்
ஆடை குறைத்து நடந்தாலும்
பள்ளி பிள்ளையானாலும்
பல் போன கிழவியானாலும்
தோழி என்றாலும்
காதலி என்றாலும்
ஒரு சில ஆண்கள் சலனப்பட்டு
தவறாய் நடப்பது சிற்றும்மை...
நம் நாட்டில் நயன்தார சீதையா நடிச்சா கூட
தீ குளிச்சு காட்டனும்
ராமனா நடிச்சவன யாரும் கேள்வி கேட்கலயே!!!
ஒரு நடிகன் டெய்லி லவ் எனப் ப
ேசலாம்
கைத்தட்டி ரசிப்பார்கள்
அதை ஒரு நடிகை பேசினால்
பெண்ணா அவள் என ஏசும் சமூகம்!!!
நான் ஆண்களை குற்றம் சொல்லவில்லை
நம் நாட்டில் பெண்களே பெண்களை குறைத்து மதிப்பிட்டு
தவறாக புரிந்துக் கொண்டு,
பேசியே பலவீனமாக்கி
சலனப் படுவோருக்கு
இரையாக்கி விடாதீர்கள்!!!
இருவரும் சமம் என போராடாதீர்கள்
அதைக் கேட்டுப் பெறும் அவசியமில்லை!!!
சிங்கப் பெண் என போற்ற வேண்டாம்
அசிங்கப் படுத்தாமல் இருந்தால் போதும்!!!
இக்கருத்தை எளிதில் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதும் பேருண்மையே!!!