கலையா? கொலையா?
கலையா? கொலையா?
டிக் டாக்கில் டிக் டிக் என கண்ணடித்து
இன்ஸ்டாவில் ஈஈஈஈ என பல்லைக்காட்டி
முக நூலில் அஷ்ட்ட கோணலாய் முகத்தைக்காட்டி
ட்விட்டரில் டிஸ்யூம் டிஸ்யூம் சண்டையிட்டு...
ஸ்னாப் சாட்டில்
நாய் வேசமும் பேய் வேசமும் போட்டு
பப்ஜீயில் அப்புச்சியை மறந்து
ஃப்ரீ பயரில் அப்பன் அக்கவுண்டைக் கொழுத்தி...
சமூக வலைதள
வலையில் சிக்கி
பைசா பொறாத லைக் கமெண்டுக்கு
ஆசப்பட்டு...
தொலைப்பேசியால்
தொல்லைக் கலைஞர்கள் ஆனார்கள்
நம் இளைஞர்கள்!!!