STORYMIRROR

Carlin Helena

Abstract Comedy Classics

4  

Carlin Helena

Abstract Comedy Classics

கல்லூரி பயணம்

கல்லூரி பயணம்

1 min
176

விறுவிறு என வேகம் வந்த நாட்கள்

ஜிகுஜிகு என மின்னிய ஆடைகள்

லொடலொட என கதைத்த தோழிகள்

கலகல என சிரிப்பில் மூழ்கிய மணிதுளிகள்

வீழ்வீழ் என இட்ட சண்டைகள்

தளதள என சிந்திய கண்ணீர்

பளபள என படம் வரைந்த புத்தகங்கள்

கிறுகிறு என கிறுக்கி தள்ளிய தாள்கள்

துறுதுறு என ஓடிஆடிய மைதானம்

கமகம என நண்பரின் உணவுகள்

வழவழ என கற்பிக்கும் ஆசிரியர்கள்

தடதட என மூடிய கதவுகள்

வெலவெல என பார்க்கும் நிகழ்நிலை வகுப்புகள்

மசமச என சென்ற நேரங்கள்

பொதபொத என குவிந்த செயல்பாடுகள்

மளமள என படித்த பாடங்கள்

பரபர என எழுதிய தேர்வுகள்

படபட என எதிர்ப்பார்த்த தேர்ச்சிகள்

மடமட என கடந்து சென்ற

       என் கல்லூரி பயணங்கள் 


Rate this content
Log in

Similar tamil poem from Abstract