கூடை நிறைந்த கொய்யாப்பழம்
கூடை நிறைந்த கொய்யாப்பழம்


நூறடிக்குப் பறந்து விரிந்த சாலை...
சுங்கம் தவிர்த்த சோழநாட்டிலே,
வண்டிகள் பயணிக்க சுங்கம்...
கூடை நிறைய கொய்யாப்பழம்
அதோ விற்கப்போகிறாள் கிழவி...
காவலுக்கு இருந்த நாயைக் கண்டு
சடாரென ஓடி வருகிறாள்,
எடுபட்டபய எல்லாத்தையும் தின்னுடுவான்னு...
வானிலிருந்து அருவியாய்க் கொட்டும் பனி
இவ்வியாமத்தில்
நாலு பணம் சேர்த்தால் நாளை ஓய்வெடுக்கலாம்
இந்த காவல் நாயோ பிடுங்கித் தின்ன
வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறது...
ஊதியம் பத்தவில்லையாம் ஆடம்பரங்களால்
கிம்பளமும் போதவில்லையாம் சொத்து சேர்க்க
என் ஒரு கூடை கொய்யாப்பழத்தை
ஓசியில் பிடுங்கித் தின்று
ஐநூறு உரூபாயை சேமிக்கிறானாம் கபோதி
ஒருநாள் பிழைப்பே அதுதான்
அதைக்கூட சிந்திக்கும் திராணியற்று
ஓசியில் பிடுங்கித் தின்ன
அவன் கண்கள் மேய்கின்றன
தினமும் மேய்ந்து
என் வெள்ளாமையைத் தின்கின்றன.