வேறொன்றுமில்லை
வேறொன்றுமில்லை
இருள் நீள நீள
மனதின் கனம் ஏனோ கூடுகிறது…
நெஞ்சைப் போட்டு அழுத்தி நசுக்குகிறது
மூச்சின் வேகம் இற்றுவிடும் போல…
கண்களின் சுனை ஊறி நிற்கிறது
எந்நேரம் கடைபோகுமென தெரியவில்லை.
கைகள் நடுக்குற்றவாறே தட்டச்சுகிறேன்…
என் பாவத்தின் பெரும்பிழை நீ
என் வாழ்வின் பெருஞ்சுமை நீ
என் உலகத்தின் அமாவாசை நீ
என் சூரிய மண்டலத்தின் கிரகணம் நீ
மொத்தத்தில் உன்னைத் தவறவிட்ட
ஏமாளி நான்…
இருள் சூழ் உலகில்
இமைக்காமலே வெளிச்சம் உணர ஏங்கியது
சிறுபிள்ளைத்தனமானது தான்…
பூனை கண்கள் மூடியதும்
பூமி இருண்டுவிடுமல்லவா?
அப்படித்தான் அப்பூனை கண்கள் மூடியதும்
எண்ணுலகம் மீளா இருளில் அமிழ்ந்து
நினைவுகளைப் புதைக்க எத்தனித்தது
மேலும் வலி கூடியதேயன்றி
வேறொன்றுமில்லை…