பெண்ணுரிமை
பெண்ணுரிமை
பெண்ணுரிமை பேசும்
அமைப்பெல்லாம்
வெறும் கண்துடைப்பு
பொழுதுபோக்கு அமைப்பாக
மாறி பதுமைகளான
வரலாறு எழுதப்பட்டு வருகிறது!
ஆணுக்குப் பெண்
சரிநிகர் என்பது
ஏடுகளில் மட்டும்
எழுதப்பட்டால்
மட்டும் போதுமா!
பெண் முன்னேற்றம்
என்பதில் ஆண்களின்
ஒத்துழைப்பும் அடங்கியிருப்பதன்றோ!