பச்சை மரமே! பச்சை மரமே!
பச்சை மரமே! பச்சை மரமே!
இன்று வெள்ளிக்கிழமை!
மஞ்சள் வைத்து
கற்பூரம் காட்டி
எமனிடம் கொண்டுபோக
அடுக்ககவாசிகள்
நாள் குறித்துள்ளனர்!
என்னுயிர்த்தோழன்
சப்போட்டாவும் கதி கலங்கி
அவன் உயிர் குயில் குடும்பத்தை
புலம் பெயர்ந்து போகச்
சொல்லியிருக்கிறான்!
காற்றிலடித்தாலும் சாயாத
கூடுகள் இன்னமும் சில
பொழுதுகளில் தரையினை
முத்தமிடப் போகின்றன!
எனதருகில் தூங்கிக்
கொண்டிருக்கும் வேம்பு மதலைகளை
இறைவனிடம் இந்தப்பிறவி
வேண்டாம் எனக் கேட்கச்
சொல்லியிருக்கிறேன்!