என் பொக்கை வாய் கெழவி
என் பொக்கை வாய் கெழவி


திண்ணையில உக்காந்து
வெத்தலை போடும் பொக்கை
வாய் கெழவி அவ!!!
ஒத்த ரூவா பொயலைக்கு ஓயாம
கடைக்கு என்னை அலக்கலிக்கும்
அரக்கியும் அவ!!!
மொத்த உலகத்தையும்
வெத்தலை இடிக்கும் உரல
ஒளிச்சு வைச்சிருக்கும்
திருடியும் அவ!!!
நான் கண்ணு முழிச்சதல
இருந்தே வெள்ளை சீலை
மட்டுமே கட்டி திரியும்
தேவதையும் அவ!!!
சுத்தி நூறு பேரு இருந்தாலும்
ஒத்த பார்வை இந்த பேரன
விட்டு வெலகாம பாத்திருக்கும்
கெட்டிக்காரியும் அவ!!!
கைல நூறுவா காச கொடுத்துட்டு
கண்ணுக்கு மறையர தூரம்
வரை என்னை பாத்து கலங்கி
நிற்கும் பாசக்காரியும் அவ!!!
கடைசி நிமிசத்தலையும்
கையிருக பிடிச்சுட்டு அப்பன
நல்லா பாத்துக்க சாமினு
சொன்ன என் சாமியும் அவ!!!
அவ கட்டை வெந்து
வருசமானாலும் அவள
நெனைக்கும் போதெல்லாம்
என் கண்ண கலங்க
வைக்கும் கைகாரியும் அவ!!!