அவள் வாழ்கிறாள்
அவள் வாழ்கிறாள்
கணவனை இழந்த
மனைவி ஒருத்தியை
உங்களை போல் எனக்கும் தெரியும்.
அவளுக்கு சில குழந்தைகளுண்டு.
அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி
அவளுக்கு அன்றிருந்த அக்கறை
இன்று அச்சமாக மாறியது
நீங்கள் கண்டதுண்டா?
இதுவரை காணவில்லை என்றால்
இனிமேலாவது காணுங்கள்.
புரிந்து கொண்டு
அவளது புலம்பல்களுக்கு
அறிவுரை கூற வேண்டாம்,
புரிகிறது என்று மட்டும் கூறுங்கள் போதும்.
இழந்த கால்களோடு
யாசகம் கேட்கும்
யாராவது உங்களுக்கு தெரிந்தால்,
அவர்களுக்கு நம்பிக்கை தர
அவளது கதையை இவ்வாறு கூறுங்கள்
"அவளது கண்களை ஓர் முறை பார்
ஓயாத சோகங்களுக்கு மத்தியில் தான்
அவள் வாழ்கிறாள்", என்று.