STORYMIRROR

Se Bharath Raj

Drama Tragedy Classics

4  

Se Bharath Raj

Drama Tragedy Classics

சொல் உண்மை

சொல் உண்மை

1 min
408

என் ஊன் உயிர் 

நீயென நினைத்தேன்

என்றும் நீ அதை

உணரலையோ?

உன் இமைமுடி விழ

நான் துடித்தேன்

அன்றும் உன்விழி அதை

காணலையோ?

என் இன்ப தென்றல் நீயோ

என் சோகம் தீர்காததெனோ 

சொல் உண்மை

கசப்பிருப்பின் 

மனதில் சுவைக்கிறேன் அதை நானும்.


என் ஆழ்மனம்

உன் முகம் நினைத்து

பல இரவுகள் விடியலையோ

உன் கடைக்கண் 

என் இரத்தமுறைத்து 

பல போர்கள் ஓயலையோ

என் காதல் கடலலை நீயோ

கரை வராமல் இருப்பது ஏனோ

சொல் உண்மை

வலியிருப்பின்

உயிரில் உணர்கிறேன் அதை நானும்.


ஊசி மழையே

துளைக்கிறாய் எனையே.

முள் ரோஜாவே

ருசிக்கிறாய் என் உயிரையே.

மிகுந்தால் எனை ஆக்கும்

மறைந்தால் எனை அழிக்கும்

என் காதலே.


என் வாழ்க்கை காயகம் நீயோ

அதை அறிந்தும்

எனை விழையாது செல்வதெனோ

சொல் உண்மை

உயிர் எடுப்பின்

விரும்பி ஏற்கிறேன் அதை நானும்.


Rate this content
Log in

Similar tamil poem from Drama