சில கசப்பான உண்மைகள்
சில கசப்பான உண்மைகள்
இன்றோடு நான் குடிப்பதில்லை என்று
சத்தியம் செய்து விட்டேன்.
எதை என்று என்னிடம்
நீங்கள் கேட்க கூடாது.
நீங்களே எது என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.
போதை தரும் திரவம்தான் அது.
மதுவாக இருக்கும் என்று மனக்கணக்கு போடாதீர்கள்.
மதுவிலக்கு என் வாழ்வில்
என் மனைவி வந்த முதல் நாளே
அமலுக்கு வந்துவிட்டது.
தேனீர் என்று தவறான கணக்கேதும்
போடாதீர்கள்
நல் நண்பன் ஒருவன் விட்டு சென்றதும்
அதை அ
ருந்தும் பழக்கம்
பறந்து விட்டது.
கருப்பட்டி காப்பி என்று
மனம் கலங்கி குழம்பாதீர்.
என் எழுத்திற்கு
வார்த்தைகள் என் மதியிலிருந்தே பிறக்க துவங்கிவிட்டது.
விஷத்தையும்
நான் அருந்துவதில்லை
என் மக்களின்
சிறு கண்களை பார்த்ததிலிருந்து.
வேறேதை நான்
அருந்தி கொண்டிருந்தேன் நிறுத்துமளவு?
பொறுமையை இழந்து
போய் விடாதீர்கள்
உண்மையை சொல்கிறேன்.
"சில கசப்பான உண்மைகள்"