STORYMIRROR

Se Bharath Raj

Comedy Tragedy Classics

5  

Se Bharath Raj

Comedy Tragedy Classics

மதியம் உறங்குவது

மதியம் உறங்குவது

1 min
479

மதியம் உறங்குவது

அவ்வளவு எளிதல்ல.


உறக்கம் உடலை உலுக்கும் போதே

படுத்து விட வேண்டும்.

புளித்து போன கதை ஒன்றை

மனதில் ஓட விட வேண்டும்.


கண் முடிய அடுத்த கணம்

இடி இடிக்கும்

மின்னல் மின்னும்

கண் திறக்க கூடாது.


கைபேசி கைக்கு எட்டும் 

தூரத்தில் தான் இருக்கும் அலறும்

போர்வைக்குள் புதைந்திருக்கும்

கை வெளியே வர கூடாது.


அம்மா காப்பி ஆருகிறது என்று கதை சொல்லுவாள் நம்பி எழ கூடாது.


அக்கா தேள் ஓடுகிறது என்று புழுகுவாள் 

அச்சப்பட்டு கூச்சலிட கூடாது.


அண்ணன் சனியேனே என்று சத்தமாக திட்டுவான் 

தலை அசைத்து உறங்க வேண்டும்.


தம்பி விட்ட காகித ராக்கெட் தலை முடியில் சொருகும் 

தவரி கூட தலை அசைக்க கூடாது.


தங்கை பாட்டு பாடி ஆட்டம் போடுவாள் 

அதை பார்த்தால் கண் போய்விடும் என்பது நினைவில் இருக்க வேண்டும்.


இறுதியில் அப்பா என்ன இந்த நேரத்துல தூக்கம் என்று கேட்க அம்மா மீண்டும் வருவாள்,

உடல் சோர்வாக இருப்பதாக கட்டமைத்தபின் எழுந்து

"இன்னும் ஒரு ஐந்து நிமிடம்" என்று கூறிவிட்டு 

மீண்டும் உறங்க வேண்டும்.


Rate this content
Log in

Similar tamil poem from Comedy