Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Harry Krish

Comedy

5  

Harry Krish

Comedy

வொர்க் ப்ரம் ஹோம் ஹைக்கு

வொர்க் ப்ரம் ஹோம் ஹைக்கு

1 min
551


         


Red signal ல் ஊருக்கு முன்னாடி போய் வண்டியை நிறுத்துவது என்பது,

 பேமிலி மெம்பர்ஸ் video conference ன் போது பின்னாடி வந்து வேடிக்கை பார்க்கும் சூழலுக்கு ஒப்பானது..

அது Grinder ல் நடுவில் சிக்கிய அரிசியின் வேதனையை விட அதீதது.


_____________________


எந்நேரமும் சித்தர்கள் உச்சரிக்கும் ஓம் என்பது

are you able to hear me? , can i share my screen? போன்ற மகத்தான வார்த்தையாகும்.

wfh உலகத்தின் ஒட்டு மொத்த தத்துவமே இதிலடங்கும்.

_____________________


மாமேய் இந்த வருஷம் கண்டிப்பா கோவா போறோம் டா என்பது

2 வருடம் ஆகியும் company யே பாக்காத fresher ன் நம்பிக்கையைப் போல் மிகப்பெரியது.


_____________________


புலியின் வாயில் பிடிபட்ட மான் கடிபடாமல் உயிர் தப்பி்ப்பது என்பது

தெரியாமல் close பட்டன் அழுத்தப்பட்ட Unsaved டாகுமென்டின் "ஆர் யூ சூர், யூ வான்ட் டு குளோஸ்" option போலாகும்.

மயிரிழை உயிர் பிழைக்கும் தருணம்.


_____________________


சினிமா இடைவெளிகளில் வரும் "நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு" விளம்பரங்கள் எல்லாம் online ல் நடக்கும் fun friday events போன்றது..

அவை கொடூரமானவை..காணச்சகிப்பதில்லை..


_____________________


"உனக்கென்னப்பா jolly யா இருக்க" எனக் காதில் கேட்பது

3 மணி நேரம் meeting முடிந்து break எடுக்க நினைக்கும்போது , "சும்மா தானா உக்காந்துருக்க, கடைக்கி போய்ட்டு வா போ" என்ற வாக்கியம் போன்றது.

தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள் ..

அது நரகத்தன்மை வாய்ந்த, கொடூரமான, மாபெரும் பாவச்செயல்.!


_____________________


ஓடாத ஆங்கிலப் படத்திற்கு ஒன்டிக்கட்டையாய் போகும் 90's. kids ன் மனநிலை என்பது 

ஆதிகாலத்துல develop செய்த application கு allowance வாங்கி night shift பார்ப்பதைப் போன்றது.

சும்மா உக்காந்து வேடிக்கை பார்ப்பது என்ன சாதாரண காரியமா என்ன..


_____________________


Rate this content
Log in