STORYMIRROR

Vivek Prabu M

Comedy Tragedy

3.9  

Vivek Prabu M

Comedy Tragedy

தோட்டா

தோட்டா

1 min
208


சுவாதியும் வெனிஸ்டாவும் கூட்டணியை முடிவு செய்ய டாக்டர் அனிதா-வின் இல்லம் சேர்கிறார்கள்!

அரியலூர் தொகுதியும் ஒரு 'எம்.பி'பி.யெஸ் சீட்டும் என பங்கீட்டுப் பேச்சு முன்னெடுக்கப்படுகிறது.

தன்னோடு களம் காணும் அனைத்து வேட்பாளர்களுக்கும் எம்பிபியெஸ் சீட் வேண்டுமென்று டாக்டர் அனிதா தனித்து நிற்கிறார்!

தைப்பூசம் முடிந்த களைப்பிலிருக்கும் முருகனை முப்பாட்டனென கோர்த்துவிடும் கூட்டத்திடம் "வாய்ப்பில்லா ராஜா" என எச்சரித்துத் திரும்பிய வேலவன் வாயில் வெட்டுண்ட சுவாதியை அலகு குத்திய பக்தை என்றெண்ணி பிரசாதப் பையோடு பிரச்சாரத்திற்குக் கிளம்புகிறார்!

சூட்டோடு சூடாக

துப்பாக்கிச் சூட்டுடன் தூத்துக்குடியில் வாக்குப்பதிவு தொடங்கியது!

மதிய நேர நி(க)லவரப்படி வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத 40 பேர் காலிடறி துப்பாக்கியில் மோதி உயிரிழந்ததாக உடைந்த சன்னல் கண்ணாடிகள் உறுதிபடுத்துகின்றன!

ஜீப்பில் வேகமாக வந்திறங்கிய விஷ்ணுபிரியா வெனிஸ்டாவின் வாயிலிருந்த தோட்டாவைத் தோண்டியெடுத்து பிஸ்டலில் பொருத்தி வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீதழுத்தி தனது வாக்கைப் பதிவு செய்கிறார்!

விலை டோக்கன்களை வீசியெறிந்து உரிமைக் குரலெழுப்பிய நோட்டாக்களைச் சாய்த்த பின்னர் சட்டசபையில் ஆடிக்கொண்டிருந்த நாற்காலிக்கு முட்டாக வைக்கப்பட்டிருந்தன தோட்டாக்கள்!


Rate this content
Log in

Similar tamil poem from Comedy