அப்பா
அப்பா


ஒட்டுப் போட்டு வாலை நீட்டி விட்டெறிகிறான்... கோணல் மாணலாய் நெழிந்து இழுக்கும் பிடிக்கு ஒருவாறாக இணங்கி உச்சி வெய்யிலின் உச்சத்திற்கு உயரத் தொடங்கி இருந்தது அப்பா செய்த பட்டம்...
விட்டும் இழுத்தும் லாவகமாய் வட்டமிடச் செய்து சிரிக்கிறான்... அப்பாவும் சிரிக்கிறார்!
காற்று காரி உமிழ முகம் திருப்பிக் கொள்கிறது பட்டம்... நூலிட்டுச் சமாதானம் செய்கையில் அப்பாவும் சிபாரிசு செய்கிறார்!
நான்கு தெரு அறிய எம்பிப் பறக்கையில் இடர்பட்டு பச்சிளம் தென்னை ஓலையில் அமைதியாய்ப் படுத்துக் கொள்கிறது... அப்பாவும் படுத்துக் கொள்கிறார்!
பலத்த காற்றுக்குப் பின் பக்குவமாய் வீடு சேர்கிறது பட்டம் அப்பாவைப் பறக்கவிட்டு...