STORYMIRROR

Vivek Prabu M

Fantasy

3  

Vivek Prabu M

Fantasy

கசடு!

கசடு!

1 min
375


மேஜர் அபிநந்தனின் உடலைப் பரிசோதித்த பின் டாக்டர் அனிதா தேனீர்க் கோப்பையை 'நீட்'டுகிறார்... அதைப் பற்றி மீசையை வருடும் தருணம் தேனீரிலிருந்து மேலெழும்பிப் பறக்கும் ஆவியோடு பாக் எல்லைக்குள் ஊடுருவத் தொடங்கியிருந்த அபிநந்தனை தனது கேள்வியால் உலுக்கித் தரையிறக்கினார் அனிதா. நாட்டைக் காக்கும் ராணுவத்தினினும் உயிரைக் காக்கும் மருத்துவத்திற்கே போட்டா போட்டியாய் இருக்கிறதே? தனியாரின் வணிகத் தளமாய் ராணுவமில்லாமல் இருத்தலே காரணமென்று நாவேந்திய தேனீர்ச் சுவையோடு விடை வந்தது. போர் விமானம் வாங்குதல் வணிகமாவதாய்ச் சொல்லப்படுகிறதே? I am not suppose to answer your question என்று சாமர்த்தியமாய் தேனீருக்குள் கரைகிறார். காஷ்மீர் இந்திய எல்லைக்குட்பட்டது என்பதைப் போல் இராமேஸ்வரமும் இந்திய எல்லைக்குட்பட்டது தானே? விமானங்களே வியக்கும் பாரத ரத்னாவைத் தந்த மண் என்று மேஜர் மிடுக்காய்ச் சொன்னார்! ஓர் எல்லையில் துப்பாக்கிகளை ஏந்தியும் மற்றுமோர் எல்லையில் வலைகளை ஏந்தியும் போராடிப் போராடிச் சாவதே ராணுவ மரபோ? தேனீர் சுடுவதாய் மேஜர் கோப்பையை வைத்தார். 'கடைசி'யில் எச்சியிருப்பது கசடு...


Rate this content
Log in

Similar tamil poem from Fantasy