பள்ளிக்கூடம் போகலாமா?
பள்ளிக்கூடம் போகலாமா?

1 min

495
பல கிளிகள் வந்து பாடிச்செல்லும்
சிற்பிக்குள் முத்து பிறக்குமிடம்...
விந்தை பல கற்று நல்வித்துக்களாய்
உருவாகுமிடம்...
மாணவர்களின் பேச்சு சத்தம் இல்லாத
ஞாயிறுகள் பாவம் செய்தவை...
மதிய வேலையில் மாணவர்கள் வைக்கும் விருந்திற்காக காத்திருக்கும் காகங்கள்
விடுமுறை நாட்களில் என்ன செய்யும்?
மாணவர்களின் வருகைக்காக ஏங்கி நிற்கும் கரும்பலகை, மேசைகள், கட்டிடம், மிட்டாய் வியாபாரி போன்று காகங்களும் ஏங்கி நிற்குமோ?