சூரியனின் சூரியவள்
சூரியனின் சூரியவள்


அழகிய! முழுமதியே உந்தன் மதிமுகம் வாடியதன் காரணம்
உந்தன் மஞ்சள் கீற்றின்
புன்சிரிப்பை ரசிக்கவே
நான் இங்கு வந்தேன்
ஆனால் ,
நீயும் தலைகவிழ்ந்து நிற்பதன் காரணம் தான்
என்ன?
மேற்கு நோக்கி சென்ற
என்
மன்னவன் - செங்கதிரவன்
இன்னும் வரவில்லை !
அவன் கிழக்கில் உதித்து செக்கச்சிவந்த கதிர்களை
என் மீது படரும்
வரை
தலை கவிழ்ந்த நான்
தலை நிமிரேன்.....
அவன் ஒளியால் நான் பிரகாசம் அடைகிறேன் :
அவனால் நான் தலை நிமிர் கிரேன் கவரப்படுகிறேன் அனைவராலும்.....
அவனில் இருந்து தோன்றியவள்
நான்
அவன் நாமத்தை
முன்னதாக
கொண்டவளும் நானே
ஆகையால்,
இந்த சூரியனின் சூரியவள்
அவன்
வருகைக்காக காத்திருப்பாள்
காலம் உள்ளவரை
சூரியனின் சூரியகாந்தி