இயற்கையின் அழகு
இயற்கையின் அழகு
நாம் காணும் படைப்பில் ஒவ்வொன்றும்
எவ்வளவு அழகான உருவங்களை படைத்திருக்கிறது இயற்கையின் அழகு...
ஒரு இலையின் வடிவம் அதிலே வலிந்து நுனியில் நிற்கும் மழைத்துளி சாரல் மெல்லிய இசையோடு தட்டி சென்று மண்ணிலே விழுந்தால் வாசனை வீசும் மண்ணின் மணமோ காற்றோடு நம்மை இழுத்து செல்லும் ஒரு நொடியில் இயற்கையின் அழகை எடுத்து சொல்லும்..
வூற்று நீரோடு மலைகளில் கொட்டி தெறிக்கும் குற்றாலமும் கும்மாளம் போட்டு இரசிக்கும்..
அலைகளின் ஓசையை மிதந்துவந்து நிற்கும் சங்கை காதிலே வைத்தால் ரீங்காரம் ஒளியில் இயற்கையின் அழகை எடுத்து சொல்லும்..