Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Narayanan Neelamegam

Abstract Fantasy

5.0  

Narayanan Neelamegam

Abstract Fantasy

கொரோனாவா....காதலா

கொரோனாவா....காதலா

1 min
35K



கண்ணுக்கு தெரியாது கொரோனா - ஆம் 

நம் கண்ணுக்கு தெரியாது கொரோனா...


கண்ணுக்கு தெரியாது காதல் - ஆம் 

நம் கண்ணுக்கு தெரியாது காதல்....

 

சில அறிகுறிகள் தோன்றும் - அதன்பிறகே

பாதிப்பை உணர்த்தும் கொரோனா 


சில அறிகுறிகள் தோன்றும் - அதன்பிறகே 

பாதிப்பை உணர்த்தும் காதல்


மேம்பட்ட தொழில்நுட்பம் இருந்தும் 

அழிக்க முடியாதது கொரோனா 


மேம்பட்ட தொழில்நுட்பம் இருந்தும் 

அழிக்க முடியாதது காதல்


நவீன உபகரணங்கள் இருந்தும் 

ஆற்றலற்று போகும் கொரோனா முன் 


நவீன உபகரணங்கள் இருந்தும் 

ஆற்றலற்று போகும் காதல் முன்


மீண்டும் சில அலசல் 

தொடர்ச்சியாக......


யாரிடம் இருந்து 

யாருக்கு சென்று சேரும்

என தெரியாது 

அது கொரோனா 


யாரிடம் இருந்து 

யாருக்கு சென்று சேரும்

என தெரியாது 

அது காதல்


உயிரோடு உயிர் கலந்து 

உயிரியல் பிணைப்பே  கொரோனா


உயிரோடு உயிர் கலந்து 

உயிரியல் பிணைப்பே  காதல்


கொரோனா வந்தபின் அவரை 

தனிமைப்படுத்தும் 


காதல் வந்தபின் அவரை 

தனிமைப்படுத்தும் 


ஒரு வேதியல் முயற்சியே 

உயிரியல் கொரோனா


ஒரு வேதியல் முயற்சியே 

உயிரியல் காதல்


இப்படியே ஒற்றுமைபட 

கொரோனாவும் காதலும் 


சின்ன நெருடல் தோன்ற 

கொரோனா காதல் இடையே 


சின்ன பொறாமை தோன்ற 

கொரோனா காதல் இடையே 


நெருடலும் பொறாமையும் சேர்ந்து 

போட்டியாய் மாற - அது

யுத்தமாய் உருவெடுக்க

இவ்விருவரிடையே பலத்த பிரளயம் 


இறுதியில் 

இந்த தீர்மானம்......  


கொரோனாவுக்கு காதல் வந்தாலும் 

காதலருக்கு கொரோனா வந்தாலும் 

மடிவது காதல் தான்....

வெல்வது கொரோனா தான் .....

கொரோனா முன் காதலும் கல்லறை தேடும் .....!!!  


Rate this content
Log in

More tamil poem from Narayanan Neelamegam

Similar tamil poem from Abstract