சர்ப்பம்
சர்ப்பம்
கனவுகளின் சர்ப்பங்கள்
தேகம் ஊர்ந்து உறிஞ்ச
அந்தி இருள் சர்ப்பம்
கவிழ்ந்து மூட
காத்திருந்த பொழுதில்
வந்து சேர்ந்தாய்
எல்லாச் சர்ப்பங்களையும்
இதழ் தொட்டு
உரித்து எறிந்தாய்
பின்
ஒட்டிக்கொண்டாய்
உயிர் ஆழம் வரை
உறிஞ்சும் நாத்தீண்டிய
சர்ப்பமாய்