நீரின்றி ....பாரில்லை.!
நீரின்றி ....பாரில்லை.!
மேகம் தான் கரந்து விட்ட பாலோ?
வருண தேவன் வழங்கிட்ட ஆரமுதோ?
பூமித்தாய் புதுப்பித்த புதையலோ?
நீரின்றி பாரோ? பார் மக்கள் நினைப்பாரோ?
கானகமும் காணாப்போச்சு...
காடும் மேடும் வீடாப்போச்சு.....
விளைநிலமெல்லாம் விலைக்குப் போச்சு.....
மரம் வளர்க்க மக்கள் மறந்து போச்சு...
பருவமழை இங்கே பொய்த்தே போச்சு.....
காற்றில் ஈரம் வறண்டு போச்சு....
ஓட உடப்பும் காஞ்சி போச்சு...
ஆத்து நீரும் வத்திப் போச்சு.....
தண்ணீர் ப்பஞ்சம் இங்கே முத்திப் போச்சு....
காத தூரம் கடந்து போயும்....
கிணத்துத்தண்ணியும் தீந்து போச்சு....
கால்கள் இரண்டும் சோந்து போச்சு....
பாழும் மனசு நொந்து போச்சு....
காசு கொடுத்து தண்ணீர் வாங்கி....
தண்ணீர் காசும் வாடகைக்கு ஈடாப்போச்சு...
விண்ணுக்குத்தான் சேட்டிலைட்டு வேகமாகப் பறந்து போச்சு....
நிலாவுல தண்ணியி
ருக்குன்னு நித்தம் நித்தம் சேதியுந்தான் வந்து போச்சு....
இலவசமாக கிடைச்சதெல்லாம் காசுன்னு மாறிப் போச்சு...
ஏழைமக்கள் நிலவரம் இங்கே நிற்கதியா ஆகிப்போச்சு....
காசுக்குத்தான் அரிசி வாங்கி கஞ்சி காய்ச்சி குடிச்சிடலாம்....
அரிசி வாங்க முடியலன்னா.... தண்ணிய குடிச்சி பசிய தணிச்சிடலாம்....
பச்சத்தண்ணியே காசுன்னா?
பாழும் மக்கள் என்ன செய்யும்?
பார்த்து ....பார்த்து..... மரத்தை பக்குவமா வளர்த்தீங்கன்னா....
பாலைவனமும் சோலைவனமா ஆகிப்போகும்!
பருவமழை பெய்து பாரெல்லாம் நிரஞ்சி போகும் ....
ஏழைங்க தாகமெல்லாம் அன்றாடம் தீர்ந்துபோகும்....
மரத்தை வளர்த்திடுங்க....
மழையுந்தான் வந்திடுங்க....
தண்ணீரை காசாத்தான் சிக்கனமாக செலவு செஞ்சிடுங்க....
இன்றைய சேமிப்பு! நாளைய பாதுகாப்பு!
தண்ணீர் சிக்கனம்.... தேவை இக்கணம்!