அணையா தீ!
அணையா தீ!
சாதி மத இன பாகுபாடு இன்றி
சமத்துவ சகோதர உணர்வோடு
குடியரசு தின கொண்டாட்டம்!
சமூக வேற்றுமையினால்
நாற்காலியில் இடமிருந்தும்
சிலர் மனதில் இடம் இல்லாததால்
இன்னும் சில மக்கள்....
ஒடுங்கி தான் கிடக்கின்றனர்!
கால் கடுக்க....
காத்து தான் கிடக்கின்றனர்!வேற்றுமையில் ஒற்றுமை ஏட்டளவிலும்
பேச்சளவிலுமே தான்!
சாதி இந்த சமூகத்திற்கு
ஏற்பட்ட புற்று !
பகுத்தறிவு தெரபி கொடுத்தும் பலனில்லை!
கல்வி எனும் ஊசியும்
களைந்த பாடில்லை!
நோயின் மூலம் தெரிந்தும்...
சாதி(தீ) எங்கோ
மனதின் அடியில்இன்றும்
கனன்று கொண்டு தான் இருக்கிறது!
அது சமயம் பார்த்து
எரிமலையாய் வெடித்தும் சிதறுகிறது!
தீக்கு தெரியாத பேதம் !
சாதீக்கு தெரிகிறது!
தீ உடலை எரித்து உயிரை பிரிக்கிறது!
சாதீ உயிரை எரித்து உடலை பிரிக்கிறது!