வேலி போட முடியுமா?
வேலி போட முடியுமா?
துள்ளி வரும் காவிரியைத்
தொட்டு வணங்குவோம்
தூர்வாரி குளம்குட்டையெலாம்
தேக்கி நிரப்பிடுவோம்
பொழிந்திடும் மழைநீரை
பூமிக்குள் அனுப்பிடுவோம்
நிலத்தடி நீர்வளத்தை
அளவின்றி பெருக்கிடுவோம்.
அணைக்கட்டி சிறைப்பிடிக்க
அடிமையில்லை காவிரித்தாய்
அனைவருக்கும் பேதமின்றி
அள்ளித்தரும் அன்புத்தாய்.
குறுகிய மனம் மனித
அழிவிற்கு வழிவகுக்கும்
தோழமை உணர்வு ஒன்றே
ஒற்றுமைக்கு வலுசேர்க்கும்.