STORYMIRROR

முனைவர் மணி கணேசன்

Classics

5  

முனைவர் மணி கணேசன்

Classics

தாலாட்டுப் பாட்டு

தாலாட்டுப் பாட்டு

1 min
582

எங்க கண்ணே நீ கண்ணுறங்கு

நீ அழுதா பொழுதுறங்கு

ஏ வெள்ளி ஆட்டுக்குத் தொட்டிக்கட்டி

நிறுத்தாட்டுங்கோ தாதியளா!

ஏ தங்கத்தாருக்குத் தொட்டிக்கட்டி

இழுத்தாட்டுங்கோ தாதியளா!

ஏ மல்லிகையே முள்ளரும்பே

மலராத காயரும்பே

மலர்ந்து மணக்குதம்மா மாரியம்மன் கோவிலிலே!

செவந்து மணக்குதம்மா செல்லியம்மன் கோவிலிலே!

பாலு அடுப்பிலே

பாலகனும் கையிலே

பாலை எறக்குவனா?

பாலகனைத் தூக்குவனா?

சோறும் அடுப்பிலே

சூரியரும் கையிலே!

சோறை எறக்குவனா?

சுந்தரனைத் தூக்குவனா?

சிட்டி தலைவாணியா

சின்ன மவ கச்சேரியா?

புள்ளி தலைவாணியா?

பெரிய மவ கச்சேரியா?

தங்கக் கொடைப் புடிச்சு

சூரியனுவராரே!

வெள்ளிக் கொடைப் புடிச்சு 

சந்திரனுவராரே!

எங்க கண்ணே நீ கண்ணுறங்கு


Rate this content
Log in

Similar tamil poem from Classics