மஞ்சள் குருவி
மஞ்சள் குருவி


பச்சைப்பசேல்
பவளமல்லிகளின் மணத்தினில்
பவனி ஊர்வலம் சோடியாக
உலா வந்த நேரத்தில்
பவளமல்லி மரமே!
உனது கைகளில்
எங்களை ஏன்
தாங்கிப் பிடிக்க
மறந்து மண்ணில்
வீழ்ந்தாய்?
விதை ஒரு இடத்தில்
முளைத்து கைகள்
அடுத்த வீட்டின்
விரல் தொட்டதால்
மடிந்து நீயும்
உனது கைகளை இழந்தனையோ!
வெட்ட வெட்ட
துளிர்க்கும் மலர்க்கைகள்
என்றாலும் எனது
வீடுகளை இழந்த சோகத்தில்
இணைய பக்கங்களில்
முராரி ராகம்
வாசிக்க மடிகணினி
மீது தலைசாய்த்துள்ளேன்