STORYMIRROR

இரா.பெரியசாமி R PERIYASAMY

Abstract Classics Inspirational

5  

இரா.பெரியசாமி R PERIYASAMY

Abstract Classics Inspirational

பட்டினியின் பசிக்கு உயிரே உணவு

பட்டினியின் பசிக்கு உயிரே உணவு

1 min
568


உலகின் முதல் குடியான

தன்னிகரற்ற தமிழனின் 

அகண்ட , ஆழ்ந்த அறிவும்

வியக்கும் சீரிய சிந்தனையும்

வீரியமான உயரிய திறமையும்

துல்லியமான மதி நுட்பமும்

ஓய்வு மறந்த உழைப்பும்

பரந்து விரிந்த மனதும்

படர்ந்த இந்த பூவுலகில் 

சாதித்தும் போதித்தும்

படைத்த வரலாற்றின்

பாதைகளில் தமிழ்சுவடுகள்

பதியாது எஞ்சிய பூமியின் 

பகுதியை தேடினால்  

ஏமாற்றமே மிஞ்சும்..  


காலச்சக்கரத்தின் சுழற்சியில்

இலங்கைத்தமிழனின்

தன்னிகரற்ற திறமைக்கும்

கடினமான உழைப்புக்கும்

இயற்கையளித்த பரிசே

இலங்கைத் தீவின் செழுமையும்

கொழும்பு நகரின் அழகும் எனும்

உண்மையைக் கூட உணராத

சிங்களவனின் மங்கலான அறிவால்

மங்கிப்போனது இலங்கை..


இலங்கை மலைகளின் அழகு

தமிழனின் விழிகளின்

பார்வையில் விழுந்த கணமே,

 தமிழனின் நிமிர்ந்த தலை

பூமித்தாயை குனிந்து வணங்கி

சாய்வான மலைப்பரப்பில் 

ஓயாது உழைத்த உழைப்பின்

பரிசே.. இலங்கையின் விவசாயமும்,

பசுமைத் தேயிலைத் தோட்டங்களும்


தமிழனின் குடும்பமே

சாய்வான மலைப்பரப்பில் 

உயிரைப் பணயம் வைத்து 

உடலை வருத்தி

வியர்வை சிந்தி

ஓய்வி

னை மறந்து 

களைப்பின்றி உழைத்து 

வளர்த்த தேயிலைச்

செடியின் இளந்தளிர்

இலைகள் வளர வளர

இலங்கையும் வளர்ந்தது

சிங்களவன் அறியாததா?


பழுத்த மரங்களின்

கனிகளை பறித்து

சுவைத்தும் விற்றும் 

மமதையில் திரிந்த

ஆணவச் சிங்களவன்

வேரின் முக்கியத்துவம் 

புரியாத மூடனாகி 

வேர்களை வெட்டியதன்

விளைவுகளை இப்போது 

அனுபவிக்கிறான்.. 


சிங்களவா..

வேரில்லாத மரங்கள் 

பூக்கவும் முடியாது 

காய்க்கவும் இயலாது 

என்னும் உண்மையை  

இப்போது புரிகிறதா ?

வேரில்லாத மரங்கள் 

மரணித்து போகும்

என்பதை மறந்து 

உன்னை அழித்து

உன் உறவுகளையும் 

இழந்து விடாதே..


நீ செய்த தவறுகளுக்கு 

பரிகாரம் செய்திட

வேர்களாக தமிழர்களை

மீண்டும் அழைத்து வந்து 

உரிமைகளை கொடுத்து 

இலங்கை தீவுக்கு

உயிர் கொடுத்தால்

சிங்களவா..

நீயும் உன் இனமும் 

உயிர் பிழைக்க வாய்ப்பாகும்..

இம்முறையும் செறுக்குற்று

தவறிழைத்தால் பட்டினியின் 

பசிக்கு உன் உறவுகளின்

உயிர்களே உணவாகும் ..


இரா.பெரியசாமி..

 



Rate this content
Log in

Similar tamil poem from Abstract