மாயத்திரை
மாயத்திரை


நாளும் உண்ணும் உணவு என்ன
சுவாசிக்கும் காற்றும் என்ன
நாளும் கடக்கும் மனங்களின் நிறங்கள் என்ன
சுற்றி நிகழும் மாற்றங்கள் தான் என்ன
நிழல் எது நிஜம் எது புரியவில்லை
கண்ணை உறுத்தும் மாயையுள்
சிக்கியும் தான் சின்னாபின்னப்படுகிறேன்
அந்த மாயையுள் நாளும்
சக்கரம் போல் உழல்கிறேன்
வாழும் காலமும் தான்
எவ்வளவு நீளமென்றும் தெரியவில்லை
அதையே கடந்திட வழிவகையும் புரியவில்லை
தாமரை இலை நீராய்
வாழ்க்கையும் கடக்கிறது -
பரிதி கண்ட நொடியில்
கரையும் பனித்துளியென
மாயை திரையும் கரையும்
நாளும் வந்திடுமோ ?