ஒரு குருவியின் அறிவுரை - வசன கவிதை
ஒரு குருவியின் அறிவுரை - வசன கவிதை
பணி 5 வசன கவிதை
மரங்கள் அனைத்தையும்
வெட்டி எறிந்து விட்டீர்கள்
எங்கள் சின்னஞ்சிறு கூடுகளையும்
பிய்த்தெறிந்து விட்டீர்கள் !
எப்படி நான் வாழ்வேனென்று
எண்ணி எண்ணியே - நான்
சோர்ந்து வீழ்ந்திட தயாரில்லை !
கிடைக்கும் இடத்தில் கூடு கட்ட
இதோ உங்கள் வீட்டு
மின் அளவீட்டுப் பெட்டி கூட
போதுமெனக்கு !
கூரை போட்ட வீடு போல்
மரங்களை கொண்டிருந்த பூமியை
கூரைகளை பிய்த்தெறிந்து விட்டு
வெட்ட வெளி ஆக்கியே
வெய்யிலில் காய்கையில் உறைக்குமோ
மரங்கள் தம்மையே அழித்ததன்
பின்விளைவு தானிதுவெனெவே ?
போய் வருகிறேன் நானுமே -
சாலை நடுவில்
போக்குவரத்து விளக்கின் நிழலில்
வீடு கட்டி குடியேறி இருக்கும்
அன்பு நண்பன் ஒருவனையே
நலம் விசாரித்து வரவே !
மண்டையில் உறைத்தால் திருந்திடுங்கள் -
இல்லையேல்
வெய்யிலின் உரைப்பில்
உருகிப் போங்கள் !