பணம்
பணம்
பணம் தேடி
பிணமாகிய வரலாறுகள்
திரைப்படத்துறையின்
அதிகாரங்களில் எழுதப்பட்ட
கண்ணாடி எழுத்துகள்!
சுற்றம் தொலைத்து
சமுதாய விடியல் காணும்
ஆசையில் பணத்தை
கோட்டை விட்ட
தொடர்கதைகள் இனியும்
தொடராதிருக்க
உழைத்துவாழும்
மந்திரத்தை போதிக்க
எந்த ஆசிரியர் வருவார்!!