ஒரு மனிதனின் வாக்குமூலம்
ஒரு மனிதனின் வாக்குமூலம்


வீதியே வீடானதே
ஆங்கே கேட்கும்
இரைச்சலும் கூட
இன்னிசையானதே !
நாயும் காகமுமே
பகிர்ந்து உண்ணும்
உறவுகள் ஆயினரே -
சக மனிதருமே
முகம் சுழித்தே தான்
ஓடி மறைந்தனரே !
என்றோ எங்கோ
எப்போதோ தொலைத்த
வாழ்வின் மிச்சங்களை
தேடிக் கொண்டிருக்கிறேன் !
அந்தத் தேடலில்
எனையே நானும்
தொலைத்துக் கொள்கிறேன் !
மீண்டெழும் நாளில்
மீண்டும் புதிதாய் பிறப்பேனோ
அன்றில்
மண்ணில் புதைந்தே மறைவேனோ !
புதிதாய் பிறந்தால் - அப்போதேனும்
வாழ விடுங்கள் !
இல்லையா - கல்லறையிலேனும்
நிம்மதியாய் தூங்க விடுங்கள் !