இயற்கை காதல் ❤️
இயற்கை காதல் ❤️

1 min

592
மண் மீது மரத்தின் காதல்
வேர்களெனும் கரங்கள் கோர்த்து
காலமெலாம் மகிழ்வான
அளவளாவலோடே தொடர்கிறது !
மலர் மீது வண்டின் காதல்
வண்ணங்களில் தொடங்கி
தேனெனும் அமுதக் கடலில்
திளைத்தே - தீராதிருக்கிறது !
கடல் மேல் முகில் கொண்ட காதல்
வானின்று கடலோடே நடை பயில
வானுக்கும் கடல் நீருக்குமூடே
மழைச் சாலையில் - காதல் வாசம் !
இயற்கை காதல் - அது
எந்நாளும் தீராக் காதல் !
அகிலத்தில் உயிரினங்களின்
வாழ்வுதனை வழிநடத்தும் காதல் !