கிளியின் சுதந்திர நாள்
கிளியின் சுதந்திர நாள்


கூண்டில் சிறைபட்டே
கிளி ஒன்றும்
நாளும் பலரது
அதிர்ஷடம் சொல்லியே
தன் அதிர்ஷ்டம் எப்போதென்று
காத்துக் காத்து
கம்பிகளூடே கடலை கொறித்து
காலங்களை போக்க
அதிர்ஷ்ட அட்டை எடுக்கும் வேளையில்
சிறு பூனை ஒன்றின் அரவம் கேட்டு
அலறியடித்து சிறகை விரிக்க
அதிர்ஷடம் வந்தது பச்சை கிளிக்கு
அடித்துத் தின்னும் பூனை வடிவிலே !
விரித்த சிறகு படபடக்க
வானில் வட்டமிட்டே
கிளிக் கூட்டமொன்றை கண்டடைய
அந்த நாள் கிளியின் இனிய நாள் !
இனி வரும் நாளெலாம்
கிளிக்கு இனிய சுதந்திர நாள் !