கொரோனா
கொரோனா


கண்ணுக்குத் தெரியாத கிருமியால் வந்ததே
கொரோனா எனும் புதுவகை நோய்
நோயால் பாதி பயத்தால் மீதியென
மக்கள் இறக்க அச்சுறுத்தும் நோயாய்
நம்மை வீட்டுக்குள்ளேயே வருடங்கள் அடைத்தது
குழந்தைகளின் படிப்போடு கண்ணையும் கெடுத்தது
இணையவழி கல்வி என்ற பெயரில்....
இன்னுமே இதன் ஆட்டம் ஓய்ந்தபாடில்லை....
அவரவர் அவரவரை சுத்தமாக வைத்து
தன் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்தாலே
இவர்களிடம் நம் ஆட்டம் செல்லாதென
கொரோனா பயந்தோடிவிடும் வந்த வழியே.....!!!
- நித்யஶ்ரீ சரவணன்