சேமிப்பே வாழ்க்கையா....!!!
சேமிப்பே வாழ்க்கையா....!!!
முதியோர்கள் - நம்
முன்னோர்கள்
சேமிக்க சொன்னது
வெறும் பணம்
மட்டும் அல்ல ..............!!!
அவர்கள்
சொல்லாமல்
சொல்லி கொடுத்தது
இவைகளும் தான் - நல்ல
குணங்களை சேர்க்க - நல்ல
மனங்களை சேர்க்க - நல்ல
பண்புகளை சேர்க்க - நல்ல
மனசுகளை சேர்க்க...!!
இது மட்டுமா .........
எண்ணிக்கை தொடரும் - நல்ல
எண்ணங்களை சேர்க்க - நல்ல
உள்ளங்களை சேர்க்க - நல்ல
நட்புகளை சேர்க்க - நல்ல
உறவுகளை சேர்க்க...!!
பட்டியல் தீராது........
உலகமே கடுகு தான் இந்த பட்டியல் முன்
சூரியனும் எரிந்து போகும் இப்பட்டியல் முன்
நிலவும் கருகி போகும் இந்த பட்டியல் முன்
பட்டியல் நீளம்
வானத்தை முத்தம் இடும்
இதை மறந்து
மனிதன் பணத்தை மட்டும்
சேமிக்க
கற்றது ஏன் ........................!!!