முயற்சி
முயற்சி


தோல்வி பட்ட உனக்கு தான்
வெற்றியின் அருமை தெரியும்
எனவே தன்னம்பிக்கை
ஒன்றை மனதில் கொண்டு
வெற்றிக்காக வரிந்து
கட்டு இந்த நவீன உலகத்தில்
வெற்றி என்பது
புத்திசாலிகளின் சொத்தல்ல
அது முன்னேற துடிக்கும்
உழைப்பாளிக்கும்,
தன்னம்பிக்கைக்குமே சொந்தம்
வாய்ப்புகள் என்பது எப்போதும்
அமைவது இல்லை உனக்கான நேரம்
வரும்போதோ அல்லது சந்தர்ப்பம்
அமையும்போது கிடைத்த வாய்ப்பினை
சரியாக பயன்படுத்த முன்னேறுபவனே
இங்கு சாமர்த்தியசாலி ஆகிறான்.
காலங்களும் மாற்றங்களும் மாறி
கொண்டே தான் இருக்கும் ஆதலால்
எந்த ஒரு வெற்றியும் நிரந்தரம்
அல்ல அதே போல் எந்த
ஒரு தோல்வியும்
நிலையானது இல்லை
ஒரு பறவை மரத்தின் கிளையில்
அமரும் போது
அது எந்த நேரத்திலும்
முறிந்து விடும் என்ற
பயத்தில் அமருவதில்லை
ஏன் என்றால் பறவை
நம்புவது அந்த கிளையை அல்ல
தன் சிறகை