STORYMIRROR

SANTHOSH KANNAN

Abstract

4  

SANTHOSH KANNAN

Abstract

சிரிக்கலாம் வாங்க..

சிரிக்கலாம் வாங்க..

1 min
283

துளிர்க்கும் சோகம் தூக்கி எறிந்து சிரிக்கும் முகம் சிறப்பாய் ஏந்து


இழந்தது எதுவும் மீண்டிடா வாழ்வு இனியும் வேண்டாம் ஏற்றத் தாழ்வு


இருப்பதை வைத்து இனிதாய் வாழ வெறுப்பதை நிறுத்து அன்பு ஆள


இறைவன் தந்த இனிய பிறப்பு இனிமேல் வராது இந்த படைப்பு


கொடுத்து உதவும் கொள்கை ஏற்று தடுத்து நிறுத்து ஏழ்மைக் காற்று


விலங்கும் சிரிக்குமா வினா ஏனோ விலங்காய் மாற விளங்குவாய் நீ


இருதயம் இனிதாய் இயங்கச் சிரி இமையின் கீழ் நீர்வழியச் சிரி


இணைந்த இதழ்கள் விரியச் சிரி மணந்த வாழ்வு மலரச் சிரி


பெற்ற பிள்ளை போற்றச் சிரி

கற்ற கல்வி ஏற்றுச் சிரி


கயமை எண்ணம் மறந்து சிரி

கடமை என்றும் தவறாது சிரி


சிரிக்கும் முகமே அழகாம் சிரி

சிறு குழந்தைபோல் சிரியோ சிரி.


என்றும் சிரிப்புப் பணியில்.......



Rate this content
Log in

Similar tamil poem from Abstract