ஆளும் வள்ளுவம்
ஆளும் வள்ளுவம்


அடி இரண்டால் அகத்தை அளந்து
படி இதைப் பாரினில் உணர்ந்து
முடி சூடும் முத்தமிழ் மொழியில்
படி அளந்தான் வள்ளுவப் பாட்டன்
முப்பால் நூல் முத்தமிழ்த் தேனாம் எப்பாவும் போற்றும் ஈரடிப் பாவாம் தப்பாது மொழியும் தகுதி உண்டாம் இப்பாரில் எவரும் இதற்கு நிகரோ ?
பாவின் வகையில் முதலும் இதுவே பாரதம் ஏற்கும் பகைமையும் இன்றி பாட்டன் மொழிந்த குறளின் அமுதம் பரிவோடு ஏற்கும் அகத்தில் மனிதம்
ஆண்டு பல கடந்த பின்னும் ஆட்டிப் படைக்கும் வரிகள் இன்னும் கூட்டிக் கழித்துப் பார்த்த எவனும் குறைகள் சொல்லா குறள் திண்ணம்