எமக்குத் தொழில் உழவு
எமக்குத் தொழில் உழவு
கதிரவன் தோன்றுமுன் களத்தினில் தோன்றி
காளையினைப் பூட்டி கலப்பையை மாட்டி
காலால் அழுத்திமிதிக்க கரடும் புழுதியாகும்
காடும் உழவாகும் கழனி
உருவாகும்
ஏரினைப் பூட்டி ஏற்றம்
இறைத்து
நீரினைப் பாய்ச்சி நிலத்தைக் குளிர்வித்து
ஆவோடு நானும் ஆழ
உழுகையில்
புழுதி கூழாகும் புதுமண் பிறப்பெடுக்கும்
இலையோடு தழையும் இட்டு
மிதிக்க
இயற்கை உரமாய் இன்னும் வலுசேர்க்க
ஆட்டுப் புழுக்கையும் ஆவின்
எருவும்
நட்ட பயிரை நலமாய்ப்
பாதுகாக்கும்
முத்தொழில் புரிபவனும் முன்னின்று வணங்கும்
இத்தொழில் சிறப்பை இயற்கையும் விரும்பும்
எத்தொழில் புரிந்தாலும்
எல்லோருக்கும் உணவு
ஏற்றமின்றி வழங்க எமக்குத்
தொழில் உழவு.