STORYMIRROR

Muthumanikandan N

Abstract Inspirational

4  

Muthumanikandan N

Abstract Inspirational

விலைவாசி ஏற்றம்

விலைவாசி ஏற்றம்

1 min
626

மல்லிகை மனமும் 

பிடிக்காமல் போனது 

கிலோ ரூபாய் நான்காயிரம் என்றதும் !!


வெள்ளியில் பரிசளிக்க திட்டமிட்டேன் நண்பன் திருமணத்திற்கு ,

கடைசியில் விலையுயர்ந்த பொருள் வேண்டுமென அவன் ஆசைப்பட வெங்காயம் பரிசளித்தேன் !!


இவையெல்லாம் பத்திரிக்கைகளில் பரபரக்க 

மூச்சு விடாமல் முருங்கைக்காயோ

முந்நூறை தாண்டியது,


 பாலாய்ப்போன விலைவாசி என முனுமுனுத்தேன் , அடுத்தநாளே அரைசதம் அடித்தது பாலாய்ப்போன பால் !!


எவன் நாட்டிலோ எஜமான் சண்டை , எந்நாட்டில் எகிறியது எரிபொருள் விலை ,

தப்பவில்லை சாமானியனின் தலை!!


விலை யெல்லாம் தெரிந்து வைத்து பகிர நினைத்தேன் 

அப்போதுதான் 

எகிற வைத்தது பெருஞ்செய்தி


என் அலைபேசி கட்டண உயர்வு 

குருஞ்செய்தி !!


கடைசியில் இந்த வருடம் குறைந்தது 

என்னவோ என் சம்பள உயர்வு சதவீதம் மட்டுமே ..


Rate this content
Log in

Similar tamil poem from Abstract