காதல் இல்லாத இடங்கள்!
காதல் இல்லாத இடங்கள்!


கோயிலில் காதல்
பூங்காவில் காதல்
பேருந்தில் காதல்
ரயிலில் காதல்
அலுவலகத்தில் காதல்
பக்கத்துவீட்டுக் காதல்
உறவுக்குள் காதல்
நட்புக்குள் காதல்
திரைப்படத்தில் காதல்
தொலைக்காட்சியில் காதல்
அங்கிங் கெனாதபடி
எங்கெங்கும் காதல்
காற்றுப் புகாத இடம்
கண்டாலும் காணலாம்
காதல் புகாத இடம்
காணவே முடியவில்லை!
என்று இறுமாந்த போது…
காதலின் எதிரிகள் என
மோதி முட்டி வந்தவை
பட்டியல் இங்கே இதோ
பார்த்துக் கொள்ளுங்கள்!
சாதி எதிர்ப்புகளால்
சரிந்து விடும் காதல்
மதத்தின் அடிப்படையில்
மறைந்து விடும் காதல்
அந்தஸ்தில்லாமையால்
அடங்கி விடும் காதல்
அகந்தையில் கூட
ஒடுங்கி விடும் காதல்
பொறாமைகளால்
கருகி விடும் காதல்
‘பொசஸிவ்னெஸ்’சில்
பொசுங்கி விடும் காதல்
ஒவ்வொரு வினைக்கும்
எதிர் வினை உண்டு
காதலில் கூட
காணலாம் இங்கு!