காதல் மனைவி
காதல் மனைவி
கனப்பொழுதும் உரையாடிடவே!
என் கணம் முழுதும் கறைந்ததென்ன!!
கண் இமை பேசிய வார்த்தையிலே!
என் ரணம் மறைந்த மாயமென்ன!!
அக்கருவிழியை கண்டதுமே!
அகக்கருவினிலே உனை சுமந்ததென்ன!!
பிரதினாலும் உனை கண்டிடவே!
பரிதவிர்க்கும் என் மனதிற்கென்ன!!
நீ துடிப்பதை பார்த்திடவே!
என் இதயத்துடிப்பு நின்றதென்ன!!
துயில்கெட்டு நீ அமர்ந்திருக்க!
எனை துயரம் ஆழ்த்திக்கொள்வதென்ன!!
துயில்கொள்ள கரம் நீட்டிடவே!
அதை சிரம்கொண்டு நீ மறுத்திடவே!!
மறுக்கணமே என் கண்ணோரம்!
கண்ணீர்த்துளி வடிந்ததென்ன!!
இத்துணையும் எண்ணிடவே!
என்னுள் உனை கண்டறிந்தேன் !!
எனையறியா உனை விதைத்திருந்தேன் !
அதை காதலென்றும் உணர்ந்திருந்தேன் !!
என் காதல் சொல்லி காத்திருந்தேன் !
உன் காதல் காதில் கேட்டிடவே !!
கேட்டதடி உன் காதல் கவி !
வந்துவிட்டேன் அதில் மூழ்கிடவே !!
பல இன்னல்களை எதிர்கொண்டாய் !
என் இல்லத்தரசி ஆகிடவே!!
இத் திரு மனந்தனை நீயும் வென்று !!
இத் திருமணந்தனை நிகழ்த்திவிட்டாய்!
மணமுடித்த முதற்வரிடமிது !!
என் மனம்வென்ற மணப்பெண்ணுக்கென்று!
பரிசளிக்க என்னிடவே !!
விலை உயர்ந்த ஒரு பொருளை!
வலை வீசி தேடிப்பார்த்தேன் !!
என் வாழ்வைவிட உயர் பரிசை!
நான் எங்கு கண்டெடுப்பேன் !!
அன்பே,
மடல் எழுதி வந்திருக்கேன் !
உன் மணவாளன் மனதினையே!!