வெண்ணிலவின் சதிராட்டம்
வெண்ணிலவின் சதிராட்டம்

1 min

54
ஓடும் மேகம் தொட்டே
களிப்போடு இங்கே
வட்ட வெண்ணிலவும்
வான வீதியில் விளையாட
காற்றும் துணையாய்
மேகக் கூட்டங்களை
அலைக்கழித்தே ஆட்டம் காட்ட
மெல்ல மெல்ல மேகமதன்
பஞ்சுப் பொதியுள்
எழில் வதனம் மறைத்தே
வெண்ணிலவும் சதிராட
இரவு முழுதும் தொடரும் -
இந்த மனம் மயக்கும்
சதிராட்டம் !!