உள்ளே உறையும் உண்மை...!
உள்ளே உறையும் உண்மை...!


உடம்பில்
உழலும்
உயிரும்
உயிரில் கலந்த
உணர்வும்
உணர்வுகளாய்
உயரும் அன்பும்
உயரே செலுத்தும் ஊக்கமும்
உள்ளம்
உயர்த்தும்
உண்மையும்
உலகுக்களித்த தாயும்
உறுதுணையாய் தந்தையும்
உயர்த்தும் குருவும்
உன்னதக் கருணையும்
உளம் நலமாக்கும் தவமும்
உடன்வரும் பொருளும்
உலக வாழ்வும்
உற்ற துணையும்
உவகையுற மக்களும்
உடனுறை மனைவியும்
உறவும்
உயிர் நட்பும் யாவும்
உண்மையில் நீதான்
உலகளித்த இறைவா
உதறிடாதே!