வெற்றி சிறகுகள்
வெற்றி சிறகுகள்
அடுக்களைக் குயிலே
உனது வெற்றி சிறகுகள் பறக்க
கல்வி உணவை
விழுங்கினாய்!
முட்டாள்தனமான உடைகள் உனது
முன்னேற்றத்தை மறைக்கும்
என்பதை ஏன் மறந்தாய்?
விழி மூடாது கண்விழித்து
வாங்கிய பட்டங்கள்
உனது உள் ஆடைகள் அரைகுறையாகப்
பறப்பதற்கு அல்ல!
வாழ்க்கையின் இரகசியமான
ஆணாதிக்கக் கோட்பாடு
இன்றளவில் உலகளவில் மாறவில்லை
என்பதை உணர்ந்து
கல்வி விளக்கை மட்டுமே
முன்னிறுத்தி பெண்விடுதலை
காணப் புறப்படு!
தொடை காட்டும் லெக்கின்சும்
மேலாடை மூடா ஆடைஅணியும்
தமிழ்பண்பாட்டின் மரபில்
இல்லாத புது அனர்த்தங்கள்
தொலைய மதுஒழிப்பு
தேவை என்றே வலியுறுத்து!
பெண்விடுதலை பெற்றிடவே
மதுஒழிப்பு தேவை என்றே முழங்கிடு!
ஆணும் பெண்ணும் சமத்துவம் காண
மகிழ்ச்சி வாழ்க்கையின் தத்துவம்
புரிய வைத்திட ஒருவனுக்கு ஒருத்தியாக
மட்டுமே வாழ்ந்துவிட்டால்
வையகத்தில் உனக்கு ஓர் தனி இடம் உண்டு